நடிகை வாணி போஜனுக்கு தற்போது 36 வயதாகிறது. சின்னத்திரையில் நடித்து அதன் பின் சினிமாவில் நுழைந்து தற்போது பிசியாக நடித்து வருபவர் அவர்.
நேற்று அவர் நகை கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்று இருக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
கேள்வி.. டென்ஷன்
உங்களுக்கு எப்போது திருமணம் என ஒரு செய்தியாளர் கேட்க, வாணி போஜன் முகமே மாறிவிட்டது.
“ச்ஸோ..” என அவர் கோபமாகி சலித்துக்கொள்ள அருகில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், ‘பர்சனல் கேள்வி கேட்காதீங்க’ என சொல்லி சமாளித்தார்.
அதற்க்கு பிறகு வாணி போஜன் வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல சென்றுவிட்டார்.