வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.105.6 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை மோசடிகளில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாக பணியகம் வெளிப்படுத்தியுள்ளது.
அத்தோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிராக ஜனவரி முதல் செப்டம்பர் வரை 570 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பெறப்பட்ட 3,351 முறைப்பாடுகளில் 1,177 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் பணிகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறிவுறுத்தல்
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு நடத்தப்பட்ட 19 சோதனைகளில் 17 உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட 104 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், ருமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புகள் தொடர்பான வெளிநாட்டு வேலை மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு பணத்தை வழங்குவதற்கு முன்னர் விவரங்களை சரிபார்க்குமாறு பொதுமக்களை வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலை மோசடிகள் தொடர்பாக பணியகத்தின் அவசர தொலைபேசி ‘இலக்கமான 1989’ ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/compensation-for-victims-of-foreign-job-scams-1729861637
