எரிபொருள் விலைக் குறைப்பானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாக காணப்படுகின்றது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது
அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake
) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகளவில் குறைக்க முடியும், ஆகவே அரசு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
மக்களிடையே விமர்சனங்கள்
இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பு போதுமானதாக இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர (Lalit Dharmasekhara) தெரிவித்துள்ளார்.
ஒக்டைன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும், மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஒக்டைன் 92 ரக பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. இதனால் மக்களிடையே இந்த விடயம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறைக்கப்படும் கட்டணங்களின் பயன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் எரிபொருள் கட்டணத்துக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அதனை குறைக்க முடியும் எனவும் கூறிய தரப்பினர் தற்போது எரிபொருள் விலையை குறைக்காமல் உள்ளது.
அத்துடன் தற்போதைய எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் லீற்றரின் விலை
கடந்த (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 319 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.