Home இலங்கை அரசியல் முஸ்லிம் சமூகம் குறித்த முகநூல் பதிவுகள் : அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாய்ந்த முறைப்பாடு

முஸ்லிம் சமூகம் குறித்த முகநூல் பதிவுகள் : அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாய்ந்த முறைப்பாடு

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு எதிராக தனது முறைப்பாட்டை காவல்துறை மா அதிபரிடம் முன்வைத்துள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் ஒருங்கமைப்பின் செயலாளர் தாஹா.ஐன்ஸ்டின் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த திங்கள் சபாநாயக்கரை சந்தித்து அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு ஒன்று அளித்திருந்தோம்.

இத தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் முஸ்லிம் சமூகம் குறித்து அவர் சில கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது அத்தோடு காவல்துறை திணைக்களம் இது தொடர்பில் நடவடிக்கை என நாம் நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார். 

https://www.youtube.com/embed/tyhhA3C1yEg

NO COMMENTS

Exit mobile version