Home இலங்கை அரசியல் இலங்கை- சீன நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை- சீன நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் சீனாவின் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கோர்ப்ரேசன் ஆகியவற்றுக்கு இடையே கடந்த வாரம் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் குறைந்தது இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 7.92 பில்லியன் ரூபாய் தொடர்பிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

செப்டெம்பர் 6ஆம் திகதி தீர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறித்த நிறுவனத்துக்கு பணம் செலுத்தவில்லை என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக நடைமுறைகள்

10 வருடங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ-தொடங்கொட பகுதிக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு ஆகஸ்ட் 27 அன்று அமைச்சரவை அனுமதி வழங்கியது.

நிலையான ஒப்பந்த நிர்வாக நடைமுறைகள் பின்பற்றவில்லை என்ற போதிலும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீனாவின், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கோர்ப்ரேசன் நிறுவனமே,கொட்டாவ-தொடங்கொட பாதைக்கான ஒப்பந்ததாரராக செயற்பட்டது
பொறியாளர்கள் டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்ட ஓரியண்டல் கொன்சல்டன்ட்ஸ் கோ லிமிடெட்டை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

சீன நிறுவனம்

அத்துடன் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி மூலம் இந்த திட்டத்துக்கு நிதியளிக்கப்பட்டது.

எனினும் சீன நிறுவனம் உரிய ஆலோசகர் சான்றிதழைக் கொண்டிருக்கவில்லை என்ற அடிப்படையில், சீன ஒப்பந்த நிறுவனத்துக்கும் ஜப்பானிய நிறுவனத்துக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டது

இருப்பினும் சீன நிறுவனம் தமது பணிக்கான கொடுப்பனவை கோரியிருந்தது.  

NO COMMENTS

Exit mobile version