Home இலங்கை அரசியல் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் குவியும் முறைப்பாடுகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் குவியும் முறைப்பாடுகள்

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்து முறைப்பாட்டை சிவில் அமைப்புக்கள் மற்றும் சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் ஆகிய ஒன்றிணைந்து இன்றைய தினம் (23) சி.ஐ.டியில் சமர்ப்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இனவாதத்தை தூண்டும் வகையில் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் குறித்த  முறைப்பாடு பதிவு வெய்யப்பட்டுள்ளது.

சி.ஐ.டியில் முறைப்பாடு

இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக நாமல் குமாரவும் இன்றையதினம் (23) சி.ஐ.டியில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் நாமல் குமார கருத்து தெரிவிக்கையில், ஆவா கும்பல் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு இராணுவ முகாம்களுக்குள் புகுந்து தஞ்சம் கேட்பதாக அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் பிரபாகரனைக் கடவுளாகக் கருதுகிறதாகவும் உண்மை பேசுபவர்களை இராணுவம், காவல்துறை மற்றும் சி.ஐ.டி.யால் கொல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா மீதான குற்றஞ்சாட்டு

மேலும், வடக்கிலும் தெற்கிலும் இரண்டு சட்டங்களை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தொடர்பாக இங்கு அவதானம் செலுத்த வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, நேற்றையதினமும்(22) ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version