Home இலங்கை அரசியல் அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு

அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு

0

அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து விபரங்களின் அடிப்படையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொகை சொத்துக்களுக்கு உரிமையாளராக

வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ள சொத்து விபரங்களின் அடிப்படையில் அவர் எவ்வாறு அவற்றை சம்பாதித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வசந்த சமரசிங்க கடந்த காலங்களில் அவர் செய்த தொழில்கள் தொடர்பிலும் அவரது வருமான நிலை தொடர்பிலும் தொலைக்காட்சி விவாதங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளதாக நிரோஷன் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே சொத்து விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெருந்தொகை சொத்துக்களை அவர் எவ்வாறு உழைத்தார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க பெருந்தொகை சொத்துக்களுக்கு உரிமையாளராக காணப்படுகின்ற விடயம் சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version