Home இலங்கை அரசியல் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

0

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த முறைப்பாடானது ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார என்பவரினால் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சின்னம் தங்களது கட்சிக்குச் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அது தங்களது ஜன அரகலய புரவெசியோ கட்சிக்கு உரியது எனவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் சின்னம்

2023ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது அமைப்புக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய அந்தச் சின்னத்தை மீளப்பெறுமாறு அந்த அமைப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/complaint-filed-over-ranil-s-election-symbol-1723930830

NO COMMENTS

Exit mobile version