Home இலங்கை குற்றம் பிரதி அமைச்சருக்கு எதிராக சேறு பூசப்படுவதாக முறைப்பாடு

பிரதி அமைச்சருக்கு எதிராக சேறு பூசப்படுவதாக முறைப்பாடு

0

இலங்கையின் கைத்தொழில் மற்றும் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சந்துரங்க அபேசிங்கவிற்கு சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அவரது ஊடக செயலாளர், அண்மையில் கணினி குற்ற விசாரணை பிரிவில் அதிகாரப்பூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார்.

பிரதி அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் திரிபாக்கப்பட்ட செய்திகளை தொடர்ந்து பரப்பும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்துரங்க அபேசிங்கவின் ஊடக செயலாளர் மமித் திசாநாயக்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட போலியான மற்றும் திரிபாக்கப்பட்ட செய்திகள் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமின்றி தொடர்ச்சியாக பல்வேறு சமூக ஊடக பக்கங்கள், வலைத்தளங்கள் மற்றும் தனிநபர்களின் மூலமாக பரப்பப்பட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட முகநூல் பக்கங்கள், இணையத்தளங்கள் மற்றும் அந்தச் செய்திகளை பரப்பும் நபர்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, கணினி குற்ற பிரிவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version