Home இலங்கை சமூகம் தேர்தல் விதி மீறல் முறைப்பாடு : வவுனியா அரச அதிபர் விடுத்த உத்தரவு

தேர்தல் விதி மீறல் முறைப்பாடு : வவுனியா அரச அதிபர் விடுத்த உத்தரவு

0

வவுனியாவில்(vavuniya) தேர்தல் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்ட நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட வியாபாரநிலையங்களை அகற்றுமாறு மாவட்ட அரச அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா மன்னார்(mannar) வீதியில் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு முன்பாக வீதியோரம் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு

இது தொடர்பாக மாவட்டதேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய காவல்துறையினர்,நகரசபை செயலாளர்,தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று(12) குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர். வியாபாரிகளோடும் கலந்துரையாடினர்.

இன்று மாலை வரை கால அவகாசம்

அதற்கமைய ஜனாதிபதிதேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அந்தப்பகுதியில் இயங்கிவந்த ஆறு வியாபாரநிலையங்களை தவிர்த்து புதிதாக அமைக்கப்பட்ட ஏனைய அனைத்து வியாபாரநிலையங்களையும் இன்று மாலை 6 மணிக்கு முன்பாக அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த உத்தரவினை மீறுபவர்கள் மீது தேர்தல்சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8

Source: https://ibctamil.com/article/complaint-of-violation-of-election-rules-vavuniya-1726142624

NO COMMENTS

Exit mobile version