Home முக்கியச் செய்திகள் வாட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான முறைபாடுகள்

வாட்ஸ்அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த ஆயிரக்கணக்கான முறைபாடுகள்

0

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய காவல்துறை மா அதிபர் வாட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார்.

குறித்த இலக்கம் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

முறைப்பாடுகள் 

இந்தநிலையில், தற்போது குறித்த வாட்ஸ்அப் இலக்கத்திற்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்து நாட்களில், இந்தளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரினால் 071 8598888 என்ற வாட்ஸ்அப் இலக்கமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

NO COMMENTS

Exit mobile version