Home இலங்கை சமூகம் நெருங்கும் பொதுத் தேர்தல்: வந்து குவியும் முறைப்பாடுகள்!

நெருங்கும் பொதுத் தேர்தல்: வந்து குவியும் முறைப்பாடுகள்!

0

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெறப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும் சட்டத்தை மீறியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 181 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 76 முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

செலவு வரம்பு

இதேவேளை,  எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட செலவு வரம்புகளை ஆணைக்குழு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version