ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தலுக்கு முன்னர் கூறியது போன்று எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 82.50 ரூபாவால் குறைக்கப்பட வேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்ப்பொன்றில் நேற்றையதினம் (17) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலை குறைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் ஜனாதிபதி, எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் நிதியமைச்சுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோரிக்கை
அத்துடன், தற்போதுள்ள இந்த அநியாய விலைச்சூத்திரத்தை எதிர்வரும் நாடாளுமன்றத்தில் இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் லாபமீட்டும் வகையில் எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா வரி அறவீடு செய்வதாக ஆனந்த பாலித குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதன் படி, 50 ரூபா வரி நீக்கத்துடன் எரிபொருள் ஒரு லீட்டரின் விலையை 82 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.