Home இலங்கை பொருளாதாரம் நாளுக்கு நாள் தேங்காய் விலையில் ஏற்படும் மாற்றம்!

நாளுக்கு நாள் தேங்காய் விலையில் ஏற்படும் மாற்றம்!

0

சந்தையில் தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலை

மேலும் சந்தையில் தேங்காய் விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேங்காய் விலை அதிகரிக்கப்பட்டு, 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்போது சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை

தற்போது இந்த விலையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை நிலவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தேங்காயின் கையிருப்பு குறைவினால் தேங்காய் விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார நிலையங்கள் மற்றும் மெனிங் வர்த்தக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எம். உபசேனா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் போதியளவு தேங்காய் கையிருப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் தேங்காய் விலை குறையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version