நேற்றைய நிலவரப்படி, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 1,229 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 1,172 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என கூறப்பட்டுள்ளது.
வன்முறைச் செயல்கள்
இதற்கு மேலதிகமாக, வன்முறைச் செயல்கள் தொடர்பான நான்கு முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன.
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, தேர்தல் பேரணிகளின் போது பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.