தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 118 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு இன்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 41 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை
அதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறை சம்பவங்கள் சார்ந்த இரண்டு முறைப்பாடுகளும் சட்டத்தினை மீறியதாக 72 முறைப்பாடுகளும் ஏனைய முறைப்பாடுகள் மூன்றும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, கடந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 118 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடந்த ஜுலை 31ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 28ஆம் திகதி வரை அறிக்கையிடப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1347 என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.