Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர் வவுனியாவில் கொடூர கொலை

யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர் வவுனியாவில் கொடூர கொலை

0

வவுனியாவில்(vavuniya) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யாழ்ப்பாணத்தைச்(jaffna) இளம் குடும்பஸ்தர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குடும்பஸ்தர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலை

இதனையடுத்து காயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர் 

இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று (29.) மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான மைந்தன் இருதயராஜா (வயது 36) என்பவராவார்.

வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி இது தொடர்பான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார். சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Source: https://ibctamil.com/article/jaffna-family-member-brutally-murdered-in-vavuniya-1724939097?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version