Home இலங்கை சமூகம் இலங்கையில் நடத்தப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு

இலங்கையில் நடத்தப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு

0

இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான முதல் தேசிய மாநாடு கொழும்பில் நடைபெற்றுள்ளது

இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இது, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் 51 குடும்பங்களை ஒன்றிணைத்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள் பிற சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளவும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், காணாமல் போனவர்களின் அன்புக்குரியவர்களைத் தேடுவதில் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு கூட்டாக சமாளிப்பது என்பதைப் பற்றி விவாதிக்கவும் இந்த மாநாடு உதவியதாக செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 

இந்த நிகழ்வின் போது, காணாமல் போனவர்களின் கதி மற்றும் இருப்பிடத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை பங்கேற்பாளர்கள் மீண்டும் வலியுறுத்தியதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர், பிரதமரின் செயலாளர் மற்றும் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடன் நேரடியாக தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு குறித்த குடும்பங்களுக்கு கிடைத்தது.


காணாமல் போனோர் தேசிய மாநாடு

இந்தநிலையில், காணாமல் போனோரின் குடும்பங்கள் எழுப்பிய சில குறிப்பிட்ட பிரச்சினைகளில், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் கதி மற்றும் இருப்பிடம் குறித்த பதில்களைப் பெற வேண்டிய அவசியம் என்பதும் அவர்களின் துன்பத்தை அங்கீகரிக்கவேண்டும் என்பதும் அடங்கும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் நடத்தப்பட்ட உலகளாவிய குடும்ப மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, காணாமல் போனோர் குடும்பங்களுடன் கலந்தாலோசித்து, காணாமல் போனோர் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு முதன்முதலில் இலங்கையில் நடத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version