Home இலங்கை குற்றம் முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்களின் வலைகள் பறிமுதல்

முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டவர்களின் வலைகள் பறிமுதல்

0

வட்டுவாகல் நந்திக்கடல் களப்பு மற்றும் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் களப்பு
பகுதிகளில் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த நடவடிக்கையில்
நேற்றையதினம் (19) வட்டுவாகலில்
50 கூட்டு வலை, 80 நூல் வலை, மற்றும் 30 தங்கூசி வலை என்பன
கைப்பற்றப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியான நடவடிக்கையில்
இன்றையதினம் (20) கொக்குளாய், கொக்குத்தொடுவாய் களப்பு பகுதிகளில் 150
கூட்டு வலையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுப்படுத்தும் நடவடிக்கை

குறித்த நடவடிக்கையானது முல்லைத்தீவு மாவட்ட நீர்வள திணைக்களத்தின் உதவி
பணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட
தலைவர் அ.நடனலிங்கத்தின் வழிநடத்தலிலும், கடற்படையினர், வட்டுவாகல்
கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம், கேப்பாபுலவு கூட்டுறவு சங்கம்,
முள்ளிவாய்க்கால் கிழக்கு அலையோசை கூட்டுறவு சங்கம், செல்வபுரம் கூட்டுறவு
சங்கம், கள்ளப்பாடு சித்திவிநாயகர் சங்கம் ஆகியோரது ஒத்துழைப்புடனும்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை களப்புக்களில்
மட்டுமல்ல பெருங்கடலிலும் நடைபெறும் என முல்லைத்தீவு மாவட்ட தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட
தலைவர் அ.நடனலிங்கம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version