மட்டக்களப்பு(Batticaloa) கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் தெரிவில் பாரம்பரிய நடைமுறைகளும், சரியான விகிதாசார முறைமைகளும் பின்பற்றப்படாமல் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக கிழக்குப் பல்கலைக்கழக அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்திற்கு(E.Srinath) தெரிவித்துள்ளனர்.
நடைபெற்ற முறைகேடுகள்
இதனையடுடுத்து, இன்று(20) நாடாளுமன்றத்தில் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்து மேற்படி விடயம் தொடர்பாக தனது அதிருப்தியையும், மேற்படி விடயத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சம்பந்தமாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருத்திற்கொண்டு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருடன் இது சம்பந்தமாக கலந்துரையாடி ஓர் முடிவினை எடுப்பதாக பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்திற்கு உறுதிமொழியளித்துள்ளார்.
