Home இலங்கை சமூகம் நரேந்திர மோடியின் பதவியேற்பில் கூச்சலிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

நரேந்திர மோடியின் பதவியேற்பில் கூச்சலிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள்

0

இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதவியேற்ற சந்தர்ப்பத்தில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சாசன புத்தகத்தை உயர்த்தி காட்டி முழக்கமிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

18ஆவது இந்திய நாடாளுமன்றில் முதலாவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்றின் சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய நரேந்திரமோடி சென்றபோதே இந்தியா கூட்டணி எம்பிக்களால் மேற்படி முழக்கமிடப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்வு 

இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் ஜூலை 3ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதல் நாளான இன்று மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 280 எம்பிக்கள் பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.  

ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த மே மாதம் 1ஆம் திகதி நிறைவடைந்திருந்தது.

மக்களவை தேர்தல்

18 ஆவது இந்திய மக்களவை தேர்தலின் வாக்குபதிவுகள் 28 மாநிலங்களிலும், எட்டு யூனியன் பிரதேசங்களிலும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

குறித்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

இதற்கமைய, 543 ஆசனங்களை கொண்ட இந்திய நாடாளுமன்றில் 240 ஆசனங்களை இந்திய பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version