Home இலங்கை அரசியல் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

புதிய ஜனாதிபதி அநுரவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

0

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய திஸாநாயக்கவிற்கு வாழ்த்துகள் என்று இந்தோ-பசிபிக் பிராந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்(Catherine West) தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

அதில் பிரித்தானிய அரசாங்கம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் அவரது அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் தனது வாழ்த்துக்களை புதிய ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு தெரிவித்துள்ளார்.

இவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமாரவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

வலுவான மனிதர்களுடன் மக்கள் தொடர்புகள், நெருக்கமான பொருளாதார உறவுகள் மற்றும் பல விடயங்களில் இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் நீண்டகால நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/congratulations-to-anura-1727026178

NO COMMENTS

Exit mobile version