டயர் இறக்குமதி தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பான ஆலோசனையொன்று இன்று (31) அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தலைமையில் நடைபெற்றுள்ளது.
உள்நாட்டு டயர் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல், நுகர்வோர் விவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இருதரப்பு கருத்துப் பரிமாற்றங்கள்
இதன்போது இலங்கையின் தேவையை விடவும் கூடுதலான டயர்கள் இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாக தற்போதைக்கு ஏராளமான டயர்கள் சந்தையில் தேங்கியிருப்பது குறித்து டயர் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டயர்கள் இறக்குமதி செய்யப்படாத நிலையில் அதன் இடைவெளியை நிரப்பும் அளவுக்கு உள்நாட்டில் டயர்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் டயர் இறக்குமதி தொடர்பில் சிற்சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், உள்நாட்டு உற்பத்தி டயர்களின் விலையைக் குறைப்பது தொடர்பாகவும் இருதரப்பும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.