Home இலங்கை அரசியல் ரணில் – சஜித்தால் களமிறக்கப்பட்ட ஒப்பந்த வேட்பாளர்கள்!

ரணில் – சஜித்தால் களமிறக்கப்பட்ட ஒப்பந்த வேட்பாளர்கள்!

0

ஜனாதிபதி தேர்தல் களமானது தற்போது எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், கட்சித்தாவலின் பின்னர் வெளியாகும் கருத்துக்கள் அரசியல் நிலைகளை சற்று கொந்தளிப்படைய செய்கிறன.

ஒரு கட்சியில் இருந்து வெளியேறியதும், முன்னதாக அங்கம் வகித்த கட்சியினையும் அதன் தலைவர்களையும் பகிரங்க கருத்துக்களால் சாடுவது தற்கால அரசியல் மேடைகளில் அரங்கேறுகிறது.

அந்த வகையில், சஜித் தரப்பில் இருந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல ”2005 ஆம் ஆண்டு தமிழர்கள் விட்ட பிழையினை இம்முறை விடமாட்டார்கள்” என்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கு இலக்கு வைக்கப்பட்டது தமிழ் பொது வேட்பாளரா? அல்லது 2005 ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணித்ததைப்போல தமிழர்கள் நடந்துகொள்ள மாட்டார்கள் என கூறுகின்றாரா?

தமிழர்களது நிலைப்பாடு எதுவாயினும் இன்று வரை அவர்கள் சிங்கள தமைமைகளிடம் கோருவதென்னவோ தனக்கான அடிப்படை உரிமைகளையேஃ

அந்தவகையில், ஐபிசி தொலைக்காட்சியின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தலதா அத்துகோரலவின் கருத்துக்கு பகிரங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவாலும், சஜித் பிரேமதாசவாலும் நிறுத்தப்பட்ட ஒப்பந்த வேட்பாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாத தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் வாக்குகள் தொடர்பில் எதன் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியும் என்றும் வினா எழுப்பியுள்ளார்.

இவ்வாறு இலங்கை அரசியலில் எதிர்கால ஜனாதிபதியை இலக்கு வைத்து காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படும் நகர்வில் தமிழ் பொதுவேட்பாளரின் திட்டமிடல் தொடர்பில் ஆராய்கிறது சக்ரவியூகம் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version