அரசியலை சாக்கடையாக சாமானிய மக்கள் பார்க்கின்றமையினால் அங்கு பெண்களின் தலையீடு என்பது குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண பல்கழைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கோசலை மதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழ் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்திற்கு பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரித்துள்ள நிலையில் பெண்கள் சார்ந்துள்ள பிரச்சினைகளின் ஆழமும் அதிகரித்துள்ளது.
ஆகவே, இவ்வாறான நிலை குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாய சூழலில் பெண்கள் உள்ள நிலையில் அதில் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது முக்கியமாக கருதப்படுகின்றது.
இருப்பினும், இலங்கை அரசியலை பொறுத்தமட்டில் அரசியலில் பெண்களின் வகிபங்கு என்பது மிகக்குறைவாக காணப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண் தலைமைத்துவம், அரசியல் ஈடுபாடு மற்றும் பெண்களினால் அரசியலில் ஏற்படும் மாற்றம் என அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது அகளங்கம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/3lgd_ZTwRPw?start=315