எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியாவில், இன்று (01.10.2024) இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தின்
போது ஏற்பட்ட சர்ச்சை நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
“இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது
சிலர் இடையூறு ஏற்படுத்தியதோடு தாம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் என
பொய்யாக கூறி எமது கட்சிக்கு உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தவும் அபகீதியை
ஏற்படுத்தும் நோக்கோடும் செயற்பட்டிருந்தனர்.
தற்போது தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படுகின்ற ஆதரவையும்
நல்ல எண்ணத்தினையும் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறான செயலில் ஈடுபட்டதை எண்ணி மனவருத்தமடைகின்றோம்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடு இடம்பெறாத வகையில் எமது அரசாங்கம்
அதனைப் பார்த்துக் கொள்ளும்” என்றார்.