யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (17.04.2025) வியாழக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பல இடங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) படம்
உள்ளடங்கிய சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கலந்துகொள்ளும் கூட்டமானது இன்றையதினம்
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கும்
முகமாக இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மக்கள் மத்தியில் விசனம்
ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிக்கு வந்த பின்னர் வாகனங்களில் இருக்கும் அலங்காரங்கள், வீதி சுவர்களில் இருக்கும் சுவரொட்டிகள் அனைத்தையும் கிளீன் சிறீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது
கூட்டத்துக்கான அழைப்பு சுவரொட்டிகள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை
மக்கள் மத்தியில் விசனத்தையும் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கையீனத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் நாட்டை அசுத்தமாக்கலாம் இதுவே வேறு யாராவது
செய்தால் அது குற்றம் என்ற வகையில் தற்போதைய அரசு செயற்படுவதாக மக்கள் விசனம்
வெளியிட்டுள்ளனர்.
செய்திகள் – பு.கஜிந்தன்
you may like this
https://www.youtube.com/embed/KylO1ua9b80
