Home இலங்கை அரசியல் சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்

சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்

0

சீமானின் வன்னிப் பயணம் என்பது நீண்ட நாட்களாகவே வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகிவந்த ஒன்றாக இருந்துவந்த அதேவேளை, வன்னியில் சீமானின் செற்பாடுகள் என்பதும் பல மர்மங்கள் நிறைந்தவையாகவே இருந்துவந்தன.

எதற்காகச் சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டார் என்கின்ற கேள்விக்கு,
எல்லாளன் திரைப்படத்தை இயக்குவதற்காக என்று முன்னர் கூறப்பட்டது.

ஆனால் பல மாதங்கள் நடைபெற்ற எல்லாளன் திரைப்பட உருவாக்கத்தில் அந்தத் திரைப்படத்தை ஆரம்பித்துவைத்த ஒரு நாளைத் தவிர, சீமான் அந்த திரைப்படப் பணிகளில் பெரிதாக ஈடுபடவில்லை என்று அறியமுடிகின்றது.

அப்படியானால் எதற்காக அவர் விடுதலைப் புலிகளால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டார்?

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் பயணத்தின் ஒரு பகுதியாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு புலனாய்வுத்துறை முக்கியஸ்தருடைய கருத்துக்களைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

 

NO COMMENTS

Exit mobile version