Home சினிமா பிக் பாஸ் 9ல் இந்த குக் வித் கோமாளி பிரபலமா! யார் தெரியுமா? இதோ பாருங்க

பிக் பாஸ் 9ல் இந்த குக் வித் கோமாளி பிரபலமா! யார் தெரியுமா? இதோ பாருங்க

0

கடந்த 7 பிக் பாஸ் சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இவருடைய பேச்சு, போட்டியாளர்களை கையாளும் விதம் மக்களை வெகுவாக கவர்ந்தது.

பிக் பாஸ் 9

பிக் பாஸ் 8ல் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

பிக் பாஸ் சீசன் 9 வருகிற அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது.

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜய் சேதுபதிதான் பிக் பாஸ் 9வது சீசனை தொகுத்து வழங்கப்போகிறார். இதனை ஜியோ ஸ்டாரின் தென்னிந்திய தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளாராம்.

இவரா?

இந்த நிலையில், பிக் பாஸ் 9வது சீசனுக்கான ஆடிஷன் துவங்கிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமரன் படத்தில் நடித்து தற்போது குக் வித் கோமாளி கலக்கிக்கொண்டிருக்கும் உமைர் பிக் பாஸ் 9ல் கலந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version