Home சினிமா அமோகமாக நடக்கும் கூலி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

அமோகமாக நடக்கும் கூலி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

0

கூலி 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான் மற்றும் சௌபின் சாஹிர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பே துவங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இதுவரை North America- $750K, Australia- $100K, UK & Ireland- $50 K என வசூல் செய்துள்ளது. இது கூலி திரைப்படத்திற்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ள அமோக வரவேற்பு ஆகும். கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனையை அங்கு கூலி படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/coolie-overseas-pre-booking-1754027594

NO COMMENTS

Exit mobile version