கல்வி அமைச்சின் கட்டட வளாகத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த செப்பு நாடாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 08 ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
51 இலட்சம் ரூபா பெறுமதியுடைய, செப்பு நாடா ஒன்று இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அண்மையில் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தது.
திருட்டு சம்பவம்
செப்பு நாடாக்கள் பொருத்தப்பட்ட இடத்திற்கு வெளியாட்கள் எவரும் செல்ல முடியாது எனவும் அதனால் கல்வி அமைச்சில் பணிபுரிபவர்கள் மட்டுமே அந்த இடத்திற்கு செல்ல முடியும் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் பல பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் இருந்தபோதிலும், இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.