Home இலங்கை சமூகம் யாழில் பேருந்தில் சிறுமிகளிடம் அத்துமீறிய இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் பேருந்தில் சிறுமிகளிடம் அத்துமீறிய இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

யாழ்ப்பாணம் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளை பாலியல் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்த முயற்சித்த இரு சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த இருவரும் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றில் முன்னிலை

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

தனங்களப்பு பகுதியில் குறித்த இருவரும் மிகக் கொடூரமான செயற்பாடுகளைச் தொடர்ச்சியாகச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்க்கை நடாத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த இருவரும் அண்மையில் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்பட்டதை  தொடர்ந்து  அவர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version