Home இலங்கை அரசியல் இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை: சர்வதேச நாணய நிதியம்

இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை: சர்வதேச நாணய நிதியம்

0

இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் இதனை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள்

“இலங்கையின் மீட்புக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் நடைபெற்ற குறித்த மாநாட்டில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த செயல் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது.

வெளிப்புறக் கடனைக் குறைக்க நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டுக் கடன் இன்னும் அதிகமாக உள்ளது.

எனவே, அதனை குறைப்பதற்கு நல்ல நிதிக் கொள்கையை உறுதியாக செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது.

இலங்கை மக்களின் அர்ப்பணிப்பு

இன்று, துணிச்சலான சீர்திருத்தங்கள் மற்றும் இலங்கை மக்களின் அர்ப்பணிப்பு காரணமாக, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும், மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் குறைப்பதிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் மீண்டும் கிடைக்கின்றன. பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானம் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version