Home ஏனையவை வாழ்க்கைமுறை சுகாதாரத் துறையின் ஊழல் முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

சுகாதாரத் துறையின் ஊழல் முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

சுகாதாரத் துறையில் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, மருந்து நிறுவனங்கள், ஒவ்வொரு மருந்துப் பொதியிலும் அந்தந்த மருந்து உற்பத்தியாளரின் பார் அல்லது QR குறியீட்டுடன் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) பதிவு எண்ணை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர்  ஆனந்த விஜேவிக்ரம விடுத்துள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

வணிகப் பொதி

இதன்படி, ஒவ்வொரு வணிகப் பொதியிலும் “NMRA அங்கீகரிக்கப்பட்ட” என்ற வார்த்தைகள் மற்றும் NMRA பதிவுச் சான்றிதழின் எண்ணைக் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 2024, ஆகஸ்ட் 1ம் திகதி முதல் சந்தையில் வெளியிடப்படும் அனைத்து மருத்துவப் பொருட்களுக்கும் இந்த ஸ்டிக்கர் முறை நடைமுறைப்படுத்தப்பட்வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You may like this,

NO COMMENTS

Exit mobile version