Home இலங்கை சமூகம் பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

0

பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணொருவரின் கூந்தலின் ஒரு பகுதியை வெட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடவளையைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவரே கண்டி பொலிஸாரிடம் நேற்று (13) முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டி – வத்தேகம வீதியில் பயணித்த பேருந்தில் தமது பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த சந்தேகநபர், தனது கூந்தலின் ஒரு பகுதியை கத்திரிக்கோலால் வெட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேககநபர் மடக்கிபிடிப்பு

கட்டுகஸ்தோட்டை – வட்டாரதென்ன சந்திக்கு அருகில் சந்தேகநபரால் கூந்தல் வெட்டப்பட்டதை அறிந்த இளம் பெண் பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகளின் உதவியை நாடியுள்ளார்.

இதன்போது, ​​பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணிகள் சிலர் வந்து சந்தேககநபரை மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version