பொலிஸ் உத்தரவை மீறியதற்காக மோட்டார் வாகனமொன்றினை சோதனை செய்ததில் 6,790 மில்லிகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலேவெல பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனத்தின் சாரதியை பொலிஸார் நிறுத்திய நிலையில், அதனை நிறுத்தாமல் சாரதி சென்றுள்ளார்.
இரகசிய ஹெரோயின் கடத்தல்
இதன்பின்னர் கலேவேல பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த தம்பதியினர் திருகோணமலை உப்புவேலி பகுதியில் தங்கியிருந்ததாகவும், அவர்களின் நிரந்தர வசிப்பிடம் மூதூர் பகுதியில் இருந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹெரோயின் கடத்தலை அவர்கள் சிறிது காலமாக இரகசியமாக நடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.
