Home இலங்கை அரசியல் ஆட்சி கவிழ்ந்தால் ஆயுதம் ஏந்தும் ஜே.வி.பி.. அர்ச்சுனா எம்.பி ஆவேசம்!

ஆட்சி கவிழ்ந்தால் ஆயுதம் ஏந்தும் ஜே.வி.பி.. அர்ச்சுனா எம்.பி ஆவேசம்!

0

அரசாங்கம் தோல்வியை தழுவும் போது ஜே.வி.பி ஆயுதம் ஏந்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை விவாதத்தில் (15.11.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர்,

“சில விடயங்களை எனக்கு நிரூபிக்க முடியும். ஆனால் இந்த நாட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்படும். ஆதலால் நாடாளுமன்றில் மட்டும் சில விடயங்களை குறிப்பிடுகிறேன்.

ஆயுதம் ஏந்தும் ஜே.வி.பி

88-89ஆம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்தி போராட்டித்தில் ஈடுபட்டது போல் அரசின் தோல்வியின் பின்னர் ஆயுதம் ஏந்தும் சூழல் இருக்கிறது. அப்படி இல்லை என்றால்
சோதனையின்றி வெளியேற்றப்பட்ட 323 கொல்களன்களில் ஆயுதங்கள் இல்லை என்று கூறுங்கள்.

கொல்களன்கள் என்ன தீபெட்டியா? கண்டுப் பிடிக்க முடியாமல் மறைத்து வைப்பதற்கு. இந்த கொல்களன்கள் வெளியேற்றிவருக்கு நீங்கள் செய்தது அமைச்சுக்கள் மாற்றியது தான்.

அதை நான் செய்திருந்தால் இப்போது என்னை கொலை செய்திருப்பீர்கள்.

தலைமைத்துவம்

இந்தியாவின் தலைவர் மோடி பத்து வருடங்களா ஆட்சியில் இருக்கிறார். அங்கு ஒரு தலைமைத்துசம் இருக்கிறது.

எங்கள் நாட்டில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஜனாதிபதிகள் மாறுகின்றனர். உங்கள் தலைமைத்துவம் வாயில் தான் இருக்கிறது. வேறொன்றிலும் இல்லை.

NO COMMENTS

Exit mobile version