Home இலங்கை சமூகம் வெள்ளத்தில் சிக்கிய தம்பதி – சடலமாக மீட்கப்பட்ட மனைவி – தேடப்படும் கணவன்

வெள்ளத்தில் சிக்கிய தம்பதி – சடலமாக மீட்கப்பட்ட மனைவி – தேடப்படும் கணவன்

0

பதுளை, வெலிமடை பகுதியில் வெள்ளதில் அடித்து செல்லப்பட்ட மனைவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் கணவனை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டவர்களில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கணவனை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

வெலிமடை பிரதேசத்தில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தம்பதி சிக்கியதாக தெரியவந்துள்ளது.

தேடும் பணிகள்

நேற்று இரவு முழுவதும் இருவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் எனவுமு் காணாமல் போனவர் 37 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

காணாமல் போனவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version