Home இலங்கை சமூகம் கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கிடமான பொதிகள்..! அதிர்ச்சியில் காவல்துறை

கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கிடமான பொதிகள்..! அதிர்ச்சியில் காவல்துறை

0

கடற்கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் அடங்கிய பொதிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை பேருவளை கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் முயற்சி

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இந்தப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.  

இந்தப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் எடையுடையவை எனத் தெரிவிக்கப்படுகிறது.  

இவை கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் முயற்சியொன்று தோல்வியடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version