Home முக்கியச் செய்திகள் துப்பாக்கிச்சூட்டில் தம்பதி பலி

துப்பாக்கிச்சூட்டில் தம்பதி பலி

0

தங்காலை, உனகுருவாவில் இன்று (18) மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தங்காலை, உனகுருவவின் கபுஹேன சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயதான தம்பதியினர்

இன்று மாலை 6.55 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் வயதான தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் ஆவர்.

9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version