நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் அமைப்புக்களும் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றை அவமரியாதை செய்ததாக நீதி அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றை அவமரியாதை
அண்மையில் மொரட்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது நீதியமைச்சர் ஹர்ஷன, வெளியிட்ட கருத்து நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையிலானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், தாம் நீதிமன்றை அவமரியாதை செய்யவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
