Home இலங்கை அரசியல் ராஜிதவின் வீட்டில் ஒட்டப்பட்ட நீதிமன்ற உத்தரவு

ராஜிதவின் வீட்டில் ஒட்டப்பட்ட நீதிமன்ற உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வசிப்பிட நுழைவாயிலில் கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவொன்று பொதுமக்களுக்கு காட்சியளிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது.

கிரிந்த மீன்பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு சட்டவிரோதமாக கொரிய நிறுவனமொன்றுக்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இதுவரை பதிலில்லை..

இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை தடுப்பதற்கான ஆணைக்குழு குறித்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

எனினும் குறித்த வழக்கு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு ராஜித சேனாரத்ன இதுவரை பதிலளிக்கவில்லை.

குறித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்திலும் அவர் முன்னிலையாகவில்லை. 

இந்நிலையில் அவரை தேடிக் கண்டறிய முடியாத சந்தேக நபராக பெயரிட்டுள்ள நீதிமன்றம், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் குறித்த உத்தரவை பொதுமக்கள் பார்வையில் படும் வண்ணமாக நேற்றைய தினம் மாலபேயில் அமைந்துள்ள ராஜித சேனாரத்னவின் வீட்டு நுழைவாயிலில் அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version