Home முக்கியச் செய்திகள் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய (Thushara Upuldeniya) நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று (10) புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதன் ஒரு பகுதியாக, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிறு (08) இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், நேற்று (09) இரவு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version