Home இலங்கை குற்றம் பிரமிட் நிதிமோசடியை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை! ​நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரமிட் நிதிமோசடியை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை! ​நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

பிரமிட் நிதிமோசடியைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொழும்பு(Colombo) பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் திலிண கமகே, பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரமீட் நிதி மோசடி தொடர்பில் தற்போதைக்கு ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

பிரமீட் நிதி மோசடி

இந்நிலையில், குறித்த மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அது தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதத்திற்குள்ளாக அதனை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் அவர் நேற்று (18) பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான நிதிமோசடி சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது மத்திய வங்கியின் முக்கிய பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டிய நீதவான் திலிண கமகே, மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் அறிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version