Home இலங்கை பொருளாதாரம் கசிப்பிற்கு மாற்றாக குறைந்த விலை மதுபானம் விரைவில் அறிமுகம்

கசிப்பிற்கு மாற்றாக குறைந்த விலை மதுபானம் விரைவில் அறிமுகம்

0

உடலுக்கும் உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தும் கசிப்பிற்கு மாற்றீடாக குறைந்த விலை மதுபான வகையொன்று விரைவில் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கசிப்பு காரணமாக கலால் திணைக்களத்துக்கு வருடாந்தம் 30 வீதமான வருமான இழப்பு ஏற்படுகின்றது.

அதனைத் தடுப்பதற்கும், பொதுமக்களை கசிப்பு பாவனையில் இருந்து மீட்பதற்கும் குறைந்த விலை மதுபான வகையொன்றை அறிமுகப்படுத்த கலால் திணைக்களம் உத்தேசித்துள்ளது. 

நிதியமைச்சுடன் கலந்துரையாடல்கள்

தற்போதைக்கு இது தொடர்பான கலந்துரையாடல்கள் நிதியமைச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version