Home இலங்கை குற்றம் ஐரோப்பாவில் சிக்கிய குற்றவாளியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை

ஐரோப்பாவில் சிக்கிய குற்றவாளியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை

0

ஐரோப்பிய நாடான பெலரூஸில் சிக்கிய லொக்குபெட்டி எனும், சுஜீவ ருவன் குமாரவை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான லொக்குபெட்டி, பெலாரூஸ் அதிகாரிகளால் விடுதலை செய்யப்படவில்லை என்றும் அவர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லொக்குபெட்டி தொடர்பில் பல போலியான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பிடியாணை

கந்தளாயில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லொக்குபெட்டியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நாடு கடத்தல் சட்டத்தை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version