ஐஸ்வர்யா ராய் – அபிஷேக்
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை உலக அழகி என்றால் அது எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான், 1997ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போனற் படங்களில் நடித்தார்.
நான் ஒரு Loser.. பிரதீப் ரங்கநாதன் ஷாக்கிங் தகவல்
தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் நிறைய விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார்.
இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளார்.
இந்த ஜோடி குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதாவது ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் ஜோடி விவாகரத்து பெற்று பிரிய போவதாக அடிக்கடி இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.
முற்றுப்புள்ளி
இந்நிலையில், மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் மற்றும் தாயார் பிரிந்யா ஆகியோருடன் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டுள்ளார்.
மூன்று பேரும் நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தயாரிப்பாளர் அனு அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் விவகாரத்து பெற உள்ளார்கள் என்று வரப்பட்ட செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.