Home இலங்கை அரசியல் அர்ச்சுனாவிற்கு எதிராக திரும்பிய அவரின் சகா!

அர்ச்சுனாவிற்கு எதிராக திரும்பிய அவரின் சகா!

0

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கேள்விகளை அவருடன் சுயேட்சைக் குழு 17 சார்பாக தேர்தலில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் மயூரன் விமர்சித்துள்ளார்.

தனது முகநூல் கணக்கில் இட்ட பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

கேள்விகள் கேட்கும்போது விடயத்தை விளங்கி கேள்விகளை கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விளக்கமளிக்கையில்,

“வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் அனைத்தும் 2024இல் தொடக்கி 2024இல் முடியும் என்றில்லை. சில திட்டங்கள் ஒரு வருடம் கடந்தும் செல்லலாம்.

கணக்கறிக்கை

அதற்காக அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பின்வாங்கப்படும் என்றில்லை.

அந்தந்த திட்டங்கள் நிறைவு செய்யப்படும் பொழுது அவற்றுக்கான மீதி செலவுகள் கணக்கறிக்கையிடப்பட்டு ஏற்கனவே 2024 பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version