“அரச அதிகாரிகளை பயன்படுத்தி நஸ்ட ஈடு பெற்றுக்கொண்டவர்களை நாங்கள் எதிர்கின்றோம், ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“நாடு இங்கு தீபற்றி எரிகின்றது. தீபற்றி எரிகின்றது என்றால் அரகலயவிற்கு பிறகு தீ வைக்கப்பட்ட வீடுகளுக்காக அப்போது ஆட்சியிலிருந்த அரச அதிகாரிகள் பெற்றுக்கொண்ட நஸ்டஈடு தொடர்பாக தான் நாடே இன்று பேசிக்கொண்டிருக்கின்றது.
அவர்களை நாங்கள் எதிர்கின்றோம்.
இதற்கு முன்னர் நடந்த அசம்பாவிதங்களுக்கு நஸ்டஈடு கிடைத்ததா? இல்லை.
ஆனால் ஆட்சியிலிருந்து ஒரே காரணத்தினால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நஸ்டஈடு கிடைத்துள்ளதை ஏற்றுகொள்ள முடியாது.
எனவே இதனை சரிவர விசாரிக்குமாறு அநுர அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கின்றேன்” என குறிப்பி்ட்டுள்ளார்.
