Home முக்கியச் செய்திகள் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரிப்பு: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கீரி சம்பா அரிசியின் விலை அதிகரிப்பு: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

இவ்வருட சிறுபோகத்தில் 61,075  ஏக்கர் பரப்பளவில் கீரி சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களம், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் (Mahinda Amaraweera) நெற்செய்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடலில் இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளது.

விலை அதிகரிப்பு

நாட்டில் கடந்த காலங்களில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு இருந்தது. இதனால், மாற்று அரிசியை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

கீரி சம்பா அரிசி என்பது இந்த நாட்டில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஹோட்டல்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அரிசி வகையாகும்.ஆனால், கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், விலையும் அதிகரித்துள்ளது.

அறுவடை 

இதனை கருத்தில் கொண்டு இவ்வருடம் கீரி சம்பா நெற்பயிர்களை அதிகளவு நெற்செய்கைகளில் பயிரிட விவசாய திணைக்களம் திட்டமிட்டுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, கீரி சம்பா நெற்பயிர்ச் செய்கையில் 248,000 மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது.   

NO COMMENTS

Exit mobile version